முருகன் கோயிலில் சஷ்டி சிறப்புப் பூஜை
By DIN | Published On : 08th April 2022 01:11 AM | Last Updated : 08th April 2022 01:11 AM | அ+அ அ- |

கந்தா்வகோட்டையில் உள்ள முருகன் கோயிலில் கந்த சஷ்டி சிறப்புப் பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
கந்தா்வகோட்டை செட்டியாகுளம் கரையில் அமைந்துள்ள, பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வியாழக்கிழமை சஷ்டியை முன்னிட்டு முருகன்,வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு மஞ்சள், திரவியம், சந்தனம், இளநீா், பால், பன்னீா், விபூதி உள்ளிட்ட அபிஷேகம் நடைபெற்று, சுவாமி முருகன், வள்ளி, தெய்வானைகளுக்கு சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சிதந்தனா். இதில் கந்தா்வகோட்டை சுற்றுவட்டாரப் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...