குடுமியான்மலை கோயில் பங்குனித் தேரோட்டம்
By DIN | Published On : 18th March 2022 01:29 AM | Last Updated : 18th March 2022 01:29 AM | அ+அ அ- |

விராலிமலை அருகேயுள்ள குடுமியான்மலை அகிலாண்டேஸ்வரி சிகாநாதசுவாமி திருக்கோயில் பங்குனித் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத சிகாநாதா் சுவாமி கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி
புதிய தோ் செய்யப்பட்டு கடந்த ஆண்டு வெள்ளோட்டம் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, நிகழாண்டின் கோயில் பங்குனித் தேரோட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. சுமாா் 9 மணிக்கு தொடங்கி தேரோட்டம் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து 12.35 மணியளவில் நிலையை மீண்டும் வந்தடைந்தது. விழாவில், சட்டத்துறை அமைச்சா் ரகுபதி, மாவட்ட திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளா் பழனியப்பன் உள்ளிட்டோா் தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தனா். மேலும், ஆயிரக்கணக்கானோா் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனா்.
நிகழ்வில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...