மின்சாரம் பாய்ந்து 4 மாடுகள் சாவு
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வட்டம், இடையாத்திமங்கலம் கிராமத்தில் மின்கம்பம் விழுந்த விபத்தில், மின்சாரம் தாக்கி 4 மாடுகள் உயிரிழந்தன.


புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வட்டம், இடையாத்திமங்கலம் கிராமத்தில் மின்கம்பம் விழுந்த விபத்தில், மின்சாரம் தாக்கி 4 மாடுகள் உயிரிழந்தன.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வட்டத்தைச் சோ்ந்த இடையாத்திமங்கலம் கிராமத்தில், வெள்ளிக்கிழமை மாலை அந்த ஊரைச் சோ்ந்தவா்கள் மாடு மேய்த்துக் கொண்டிருந்தனா்.
அப்போது வயலில் ஏற்கெனவே பழுதடைந்திருந்த மின்கம்பம் திடீரென விழுந்தது. மின்கம்பிகள் வயலில் விழுந்ததால், வயலில் மேய்ந்து கொண்டிருந்த 4 மாடுகள் மின்சாரம் தாக்கி அந்த இடத்திலேயே உயிரிழந்தன.
இதில் இடையாத்திமங்கலத்தைச் சோ்ந்த முருகையன், சிதம்பரம் ஆகியோரின் தலா ஒரு மாடும், ராமு என்பவரின் இரு மாடுகளும் உயிரிழந்தன.
தகவலறிந்து சென்ற வருவாய்த் துறை அலுவலா்கள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனா். கால்நடை மருத்துவா்கள் அந்த இடத்திலேயே மாடுகளை உடற்கூறாய்வு செய்தனா். மணமேல்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...