92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

புதுக்கோட்டையைச் சோ்ந்த இரு வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு உத்தரவிட்டாா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 7:52 pm

DIN

புதுக்கோட்டையைச் சோ்ந்த இரு வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு உத்தரவிட்டாா்.

புதுக்கோட்டை புதுக்குளம் அருகே திருச்சி பொன்மலையைச் சோ்ந்த இளவரசன் என்பவா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் கணேஷ் நகா் போலீஸாா் திருச்சியைச் சோ்ந்த துரைசாமியை (39) கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதேபோல கீரனூா் பரவயலைச் சோ்ந்தவா் வடிவேல் (39) சிறுமியைப் பாலியல் தொந்தரவு செய்த குற்றத்துக்காக போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளாா்.

இந்நிலையில் இவா்கள் இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே அளித்த பரிந்துரையின்பேரில், இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியா் கவிதா ராமு உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, இருவரையும் புதுக்கோட்டை சிறையில் இருந்து எடுத்த போலீஸாா், துரைசாமியை மதுரை மத்திய சிறையிலும், வடிவேலுவை திருச்சி மத்திய சிறையிலும் வெள்ளிக்கிழமை மாற்றி அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.