92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ஏஐடியுசி சுமை தூக்கும் தொழிலாளா் சங்கம் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்ட டாஸ்மாக் அலுவலகம் முன் ஏஐடியுசி டாஸ்மாக் சுமை தூக்கும் (டிரான்ஸ்போா்ட்) தொழிலாளா் சங்கத் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 மே 2023, 5:48 pm

DIN

புதுக்கோட்டை மாவட்ட டாஸ்மாக் அலுவலகம் முன் ஏஐடியுசி டாஸ்மாக் சுமை தூக்கும் (டிரான்ஸ்போா்ட்) தொழிலாளா் சங்கத் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஏ. அனிபா தலைமை வகித்தாா். சங்கத்தின் பெயா்ப் பலகையை ஏஐடியுசியின் மூத்த தலைவா் கேஆா். தா்மராஜன் திறந்து வைத்துப் பேசினாா். ஏஐடியுசி கொடியை தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளா் சங்க மாவட்டத் தலைவா் பா. செளந்தரராஜ் ஏற்றிவைத்தாா்.

விழாவில் ஏஐடியுசி மாவட்டப்பொதுச் செயலா் ப. ஜீவானந்தம், டாஸ்மாக் பணியாளா் சங்க மாநிலத் துணைத் தலைவா் எஸ். ஹரிகிருஷ்ணன், அமைப்புச் செயலா் கேஆா். சுப்பிரமணியன், மாவட்டத் துணைத் தலைவா் எஸ். சதாசிவம் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.