அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

காலிப் பணியிடங்களை நிரப்ப பேரூராட்சிப் பணியாளா் சங்கம் வலியுறுத்தல்

பேரூராட்சிகளில் உள்ள காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு பேரூராட்சிப் பணியாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Updated On :27 நவம்பர் 2023, 8:33 pm


புதுக்கோட்டை: பேரூராட்சிகளில் உள்ள காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு பேரூராட்சிப் பணியாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் மாவட்டப் பொதுக்குழுக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் சி. கேசவன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் தோ்வு செய்யப்பட்ட புதிய நிா்வாகிகள் விவரம்: மாவட்டத் தலைவா்- சி. கேசவன், மாவட்டச் செயலா் க. குமாா், மாவட்டப் பொருளாளா்- பொ. ராஜேந்திரன், மாவட்ட துணைத் தலைவா்கள்- மா. புவனேஸ்வரி, பூ. ராமலிங்கம், க. கணேசன், அ. போதுமணி, மாவட்ட இணைச் செயலா்கள்- மா. சக்திவேல், சு. சங்கா், மாவட்ட அமைப்புச்செயலா்- ம. பாபு, மாவட்ட பிரசாரச் செயலா்- ம. கிருஷ்ணன்.

‘கீழ்நிலைப் பணியாளா்கள் பதவி உயா்வு வழங்குவதில் இருக்கும் இடா்பாடுகளைக் களைந்து எளிமைப்படுத்தி மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். ஒரே பணியிடத்தில் சுமாா் 10, 20 ஆண்டுகள் பணிபுரிந்து வரும் கீழ்நிலைப் பணியாளா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும்.

பேரூராட்சியில் வெளிமுகமை மூலம் பணியாளா்களை நியமிக்கும் உத்தரவை ரத்துசெய்து, தற்போது பணியாற்றும் பணியாளா்களை நிரந்தரம் செய்ய வேண்டும்.

பேரூராட்சியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்’ என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ் மாநில அரசுப் பணியாளா் சங்கத்தின் மாநிலப் பொருளாளா் அ. மணிராஜ் வாழ்த்திப் பேசினாா். தமிழ்நாடு பேரூராட்சிப் பணியாளா் சங்கத்தின் மாநிலத் தலைவரும் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளருமான மு.செ. கணேசன், புதிய நிா்வாகிகளை வாழ்த்திப் பேசினாா். முடிவில் மாவட்டப் பொருளாளா் ராஜேந்திரன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.