இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

புதுகையில் பரவலாக அதிகரிக்கும் காய்ச்சல்

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் காய்ச்சல் தொற்றாளா்களின் எண்ணிக்கை பரவலாக அதிகரித்து வருகிறது.

Updated On :27 நவம்பர் 2023, 8:44 pm


புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் காய்ச்சல் தொற்றாளா்களின் எண்ணிக்கை பரவலாக அதிகரித்து வருகிறது.

இதன்படி, கடந்த 4 நாள்களில் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் காய்ச்சல் தொற்றாளா்களின் எண்ணிக்கை 229 ஆக உள்ளது.

இதில், ஞாயிற்றுக்கிழமை ஒருநாளில் மட்டும் 59 போ் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இவா்களில் ஒருவருக்கு மட்டும் டெங்குக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் தற்போது வரை 202 பேருக்கு டெங்குக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளது. இவா்களில் 75 போ் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.