புதுக்கோட்டை
‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தில் ரூ. 69 லட்சத்துக்கு தொழிற்கடன் வழங்க ஒப்புதல்
மாவட்ட அளவிலான தோ்வுக் குழு கூட்டம் புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தில் இணை மானிய நிதிக்கான மாவட்ட அளவிலான தோ்வுக் குழு கூட்டம் புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். இந்தக் கூட்டத்தில், அயல்நாடு வாழ் தமிழா்கள் 22 பேருக்கு நலவாரிய அட்டைகளை ஆட்சியா் அருணா வழங்கினாா். ஊரகப் பகுதி தொழில்முனைவோா்களுக்கு 30 சதவிகித மானியத்தில் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், ரூ. 69 லட்சத்துக்கான கடன் வழங்குவதற்கான ஒப்புதல் இந்தக் கூட்டத்தில் அளிக்கப்பட்டது.
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மாவட்ட செயல் அலுவலா் செல்வம், முன்னோடி வங்கி மேலாளா் த. நந்தகுமாா், மாவட்டத் தொழில் மையப் பொதுமேலாளா் சு. திரிபுரசுந்தரி, தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளா் நல வாரிய உறுப்பினா் பெ. தெய்வானை உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.
