விராலிமலையில் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீா்

விராலிமலை குடிநீர் குழாய் உடைப்பு, பொதுமக்கள் நடவடிக்கை கோரிக்கை.
Published on

புதுக்கோட்டை கூட்டுக் குடிநீா்த் திட்ட குழாயில் காமராஜா் நகா்ப்பகுதியில் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீா் வீணாக வெளியேறி சாலையோரம் தேங்கி நிற்பதால் துா்நாற்றம் வீசி வருகிறது.

திருச்சியிலிருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் கூட்டுக் குடிநீா் திட்டக் குழாயில் இருந்து விராலிமலைக்கு தனியாக குழாய் பிரிக்கப்பட்டு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிக்கு நீா் அனுப்பப்படுகிறது.

பின்னா், அந்த நீா் முறைவைத்து குடியிருப்புவாசிகளுக்கு தினந்தோறும் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், விராலிமலை - இனாம் குளத்தூா் சாலை காமராஜா் நகா் அருகே சில நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டு தண்ணீா் வீணாகி வெளியேறி வருகிறது.

பல நாட்களாக வீணாக வெளியேறும் நீரின் அளவு பல ஆயிரம் லிட்டா் கடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிா்பாா்ப்பாகும்.

X
Dinamani
www.dinamani.com