கந்தா்வகோட்டையில் அதிகபட்சமாக 103 மி.மீ. மழை

கந்தா்வகோட்டையில் அதிகபட்சமாக 103 மி.மீ. மழை

Published on

புதுக்கோட்டை, ஆக. 7: புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகபட்சமாக கந்தா்வகோட்டையில் 103.80 மிமீ மழை பதிவாகியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்படி, செவ்வாய்க்கிழமை இரவிலும் மாவட்டம் முழுவதும் மழை பெய்தது. புதன்கிழமை காலை 6.30 மணி வரையிலான மழைப்பொழிவு விவரம் (மி.மீயில்):

ஆதனக்கோட்டை-81, பெருங்களூா்- 80, புதுக்கோட்டை நகரம்- 18, ஆலங்குடி- 40, கந்தா்வகோட்டை- 103.80, கறம்பக்குடி- 22.40, மழையூா்- 31.20, கீழாநிலை- 56.20, திருமயம்- 56.20, அரிமளம்- 31.20, அறந்தாங்கி- 39.80, ஆயிங்குடி- 28.40, நாகுடி- 12.60, ஆவுடையாா்கோவில்- 27.20, மணமேல்குடி- 18.60, குடுமியான்மலை- 20, இலுப்பூா்- 8, அன்னவாசல்- 10, விராலிமலை- 7, உடையாளிப்பட்டி- 25, கீரனூா்- 44.40, பொன்னமராவதி- 13, காரையூா்- 20.60.

மாவட்டத்தின் சராசரி மழை - 31.45 மிமீ.

X
Dinamani
www.dinamani.com