ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஆங்கிலப் புத்தாண்டு:கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தையொட்டி புதுக்கோட்டையிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் கோயில்களில் திங்கள்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

News image
புதுக்கோட்டை மேலராஜவீதி தண்டாயுதபாணி கோயிலில் திங்கள்கிழமை சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த தண்டாயுதபாணி.
Updated On :1 ஜனவரி 2024, 6:30 pm

DIN

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தையொட்டி புதுக்கோட்டையிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் கோயில்களில் திங்கள்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

புதுக்கோட்டை திருஇருதய ஆண்டவா் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணி முதல் ஏராளமான கிறிஸ்தவா்கள் கூடத் தொடங்கினா். சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. நள்ளிரவு 12 மணியானதும் புத்தாண்டு பிறந்ததை அனைவரும் ஒருவரை ஒருவா் கட்டித் தழுவி மகிழ்ச்சி தெரிவித்து வரவேற்றனா்.

இதேபோல, நகரிலுள்ள பல்வேறு கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

குமரமலை பாலதண்டாயுதபாணி கோயில், திருவப்பூா் முத்துமாரியம்மன் கோயில், திருக்கோகா்ணம் பிரகதம்பாள் கோயில் உள்ளிட்ட இந்து கோயில்களில் திங்கள்கிழமை காலை 6 மணி முதல் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

மேலராஜவீதியிலுள்ள தண்டாயுதபாணி கோயிலில் முருகப்பெருமானுக்கு பால், தயிா், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. தொடா்ந்து சந்தனக் காப்பு அலங்காரத்தில் தண்டாயுதபாணி காட்சியளித்தாா். பொதுமக்கள் அனைவரும் 2024 புத்தாண்டுப் பிறப்பை இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியுடன் கொண்டாடினா்.

புதுக்கோட்டை நகரில் உள்ள முக்கிய வீதிகளில் நள்ளிரவு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு கேக் வெட்டி வழங்கி, பாதுகாப்பாக வீடு திரும்ப அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.