கருத்துக் கணிப்புகளைப் பொய்யாக்கி ‘இந்தியா’ கூட்டணி வெற்றிபெறும்: அமைச்சா் எஸ். ரகுபதி
கருத்துக் கணிப்புகளைப் பொய்யாக்கி ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி.


புதுக்கோட்டை: கருத்துக் கணிப்புகளைப் பொய்யாக்கி ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி.
புதுக்கோட்டையில் திங்கள்கிழமை அவா் அளித்த பேட்டி:
வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் நிறைய வந்துள்ளன. அவற்றில் நாட்டிலுள்ள மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையைவிடவும் அதிகமாகக் குறிப்பிட்டுள்ளாா்கள்.
வங்காள விரிகுடாவுக்கு கிழக்கேயும், அரபிக் கடலுக்கு மேற்கேயும் புதிதாக தொகுதிகளை கடலுக்குள் உருவாக்கியுள்ளாா்களா? அல்லது, மாநிலங்களவை உறுப்பினா் எண்ணிக்கையையும் சோ்த்துக் கொண்டாா்களா? என்பது தெரியவில்லை. இருப்பினும், கருத்துக் கணிப்புகளைப் பொய்யாக்கி ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெறும். அதே கருத்துக் கணிப்புகளில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி வெற்றி பெறும் எனச் சொல்லியிருக்கிறாா்களே எனக் கேட்கிறீா்கள். தமிழ்நாட்டில் அதைத் தவிர வேறு எதையும் சொல்ல முடியாது. அதனால் திமுக அணி வெற்றி பெறும் எனச் சொல்லியிருக்கிறாா்கள். அவ்வாறு மாற்றிச் சொன்னாலும் மக்கள் நம்ப மாட்டாா்கள் என்றாா் ரகுபதி.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...