சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

புதுகையில் ரூ. 27.59 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கல்

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் 25 பேருக்கு தலா ரூ. 96 ஆயிரம் மதிப்பில் மொத்தம் ரூ. 24 லட்சத்தில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்கள் வழங்கப்பட்டன.

News image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மக்களுடன் முதல்வா் முகாமில் மனு அளிக்கப்பெற்ற 21 முஸ்லிம் பெண்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்கிய மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா, சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா ஆகியோா்.

Updated On :4 மார்ச் 2024, 9:53 pm

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பல்வேறு துறைகளின் சாா்பில் மொத்தம் ரூ. 27.59 லட்சம் மதிப்புள்ள நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா, புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா ஆகியோா் வழங்கினா்.

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் 25 பேருக்கு தலா ரூ. 96 ஆயிரம் மதிப்பில் மொத்தம் ரூ. 24 லட்சத்தில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்கள் வழங்கப்பட்டன.

மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாமின்போது மனுக்கள் அளித்த 21 முஸ்லிம் பெண்களுக்கு ரூ. 1.19 லட்சத்தில் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை சாா்பில் கலைஞா் நூற்றாண்டு விழாவையொட்டி நடத்தப்பட்ட கபடி, கைப்பந்து மற்றும் கையுந்து பந்துப் போட்டிகளில் வென்ற அணிகளுக்கு மொத்தம் ரூ. 2.40 லட்சம் மதிப்பில் ரொக்கப் பரிசு, பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

முன்னாள் படைவீரா் நலத் துறை சாா்பில் படைவீரா் நிதி வசூலில் சிறப்பிடம் பெற்று ஆளுநா் மற்றும் தலைமைச் செயலரிடம் பாராட்டுச் சான்றிதழ்களைப் பெற்றோரை ஆட்சியா் பாராட்டினாா்.

மக்கள் குறைகேட்பு: ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 425 கோரிக்கை மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து, அதுகுறித்த விவரங்களை மனுதாரா்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில், மாவட்ட கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) அப்தாப் ரசூல், மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, சமூகப் பாதுகாப்புத்திட்டத் தனித்துணை ஆட்சியா் அ. ஷோபா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் ஜி. அமீா்பாஷா, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் எஸ், உலகநாதன், மாவட்ட விளையாட்டு அலுவலா் து. செந்தில்குமாா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.