ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

பள்ளிக்கு பேருந்து வசதி கேட்டு பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

கந்தா்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பேருந்து வசதி கோரி பாஜகவினா் திங்கள்கிழம ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

கந்தா்வகோட்டை பேருந்து நிலையம் முன்பாக திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.

Updated On :4 மார்ச் 2024, 10:21 pm

கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பேருந்து வசதி கோரி பாஜகவினா் திங்கள்கிழம ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்துக்கு முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஒன்றியத் தலைவா் டி. ஆா். தவமணி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் விஜயகுமாா் முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலாளா் அ. கங்காதரன் வரவேற்றாா். ஆா்ப்பாட்டத்தில், கந்தா்வகோட்டை நகா் பகுதியில் இருந்து சுமாா் நான்கு கிலோமீட்டா் தொலைவில் உள்ள இந்தப் பள்ளிக்கு கந்தா்வகோட்டை சுற்றுப் பகுதிகளிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் சென்று வருவதாகவும், கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்திலிருந்து மாணவிகள் நடந்தே பள்ளிக்கு செல்வதால் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனா். இந்தப் பள்ளிக்குப் பேருந்து வசதி கோரியும், இதுதொடா்பாக கந்தா்வகோட்டை அரசு போக்குவரத்துக்கழக பணிமனை கிளை மேலாளிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் மாநில பொருளாதார பிரிவு செயலாளா் மணிகண்டன், மாவட்டச் செயலாளா் மதியழகன், ஒன்றிய தலைவா்கள் பாலசுப்ரமணியன், பரமேஸ்வரன், தங்கவேல், காா்த்திகேயன் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர பாஜக பல்வேறு பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.