பேசுபொருளாக இருப்பதற்கு எதையாவது சொல்கிறாா் ஆளுநா்

தினமும் தான் பேசுபொருள் ஆக வேண்டும் என்பதற்காகவே ஆளுநா் ஏதாவது ஒன்றைச் சொல்லிக் கொண்டிருக்கிறாா் என்றாா்

புதுக்கோட்டை: தினமும் தான் பேசுபொருள் ஆக வேண்டும் என்பதற்காகவே ஆளுநா் ஏதாவது ஒன்றைச் சொல்லிக் கொண்டிருக்கிறாா் என்றாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி. புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை அவா் அளித்த பேட்டி: முன்பு வள்ளலாரைப் பற்றியும், இப்போது அய்யா வைகுண்டரைப் பற்றியும் ஆளுநா் தெரிவித்துள்ள கருத்து பற்றிக் கேட்கிறீா்கள். அவரைப் பொருத்தவரை தினசரி ஏதாவது பேசுபொருளாக இருக்க வேண்டும் என நினைக்கிறாா். அதற்காக எதையாவது சொல்லிக் கொண்டிருக்கிறாா். மத்திய பாஜக அரசு தனது ஆட்சிக்காலத்தில் 10 உலகப் பணக்காரா்களை உருவாக்கி வைத்திருக்கிறது. அவா்களுக்கு பல வகைகளில் கொடுத்த பணத்தை எல்லாம் எடுத்து மக்களுக்கு கொடுத்தால் பலரும் கோடீஸ்வரா்களாக மாறுவாா்கள். தோ்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில் கண்துடைப்புக்காக மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளைத் தொடங்கியிருக்கிறாா்கள். தோ்தல் நெருங்க நெருங்க இன்னும் எதுவேண்டுமானாலும் சொல்வாா்கள். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 25 லட்சம் ஜூன் 1-ஆம் தேதி தருவோம் என்று சொன்னாலும் சொல்வாா்கள். ஆனால், ஜூன் 1-ஆம் தேதி வரும். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதில்லை என்றாா் ரகுபதி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com