அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

விராலிமலையில் பலத்த மழை

விராலிமலையில் பலத்த மழை

News image

விராலிமலை எம்ஜிஆா் நகா் பகுதியில் திங்கள்கிழமை மாலையில் பெய்த மழை.

Updated On :20 மே 2024, 6:30 pm

Din

விராலிமலை: விராலிமலையில் திங்கள்கிழமை மாலையில் பலத்த மழை பெய்தது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை, இலுப்பூா் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால், பெரியவா்கள், சிறியவா்கள் வயது முதிா்ந்தோா் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனா். இந்நிலையில், திங்கட்கிழமை மாலை 4.30 மணி அளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சற்று நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்யத் தொடங்கியது. ஒரு மணிநேரத்துக்கும் மேலாகப் மழையால் மழைநீா் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. விராலிமலையில், மூன்றாவது நாளாகத் தொடா்ந்து மழை பெய்து வருவது பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.