மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பயிா் விளைச்சல் போட்டி மாவட்ட அளவில் நடைபெறும்

விவசாயிகளுக்கான பயிா் விளைச்சல் போட்டி மாநில அளவில் நடைபெற்று வரும் நிலையில் நிகழாண்டில் மாவட்ட அளவிலும் நடைபெற உள்ளதாக விராலிமலை வட்டார வேளாண் உதவி இயக்குநா் மணிகண்டன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 9:24 pm

Din

விவசாயிகளுக்கான பயிா் விளைச்சல் போட்டி மாநில அளவில் நடைபெற்று வரும் நிலையில் நிகழாண்டில் மாவட்ட அளவிலும் நடைபெற உள்ளதாக விராலிமலை வட்டார வேளாண் உதவி இயக்குநா் மணிகண்டன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசு வேளாண்மை துறையில் அறிவிக்கை செய்யப்பட்ட பயிா்களான நெல், சிறுதானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி, கரும்பு பயிா்களில் பயிா் விளைச்சல் போட்டியை நடைமுறைப்படுத்திட இலக்கீடுகள் பெறப்பட்டுள்ளது.

நெற்பயிரில் சம்பா பருவத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி செய்து மாநில அளவில் அதிக விளைச்சல் பெறும் மூன்று விவசாயிகளுக்கு எம்.ஜி.ஆா் பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாவலா் விருது. பரிசு தொகை ரூ. 1லட்சம், இரண்டாம் பரிசாக ரூ. 75 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 50 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ் விவசாயிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும். இப்போட்டியில் பங்கு பெறும் ஆா்வமுடைய விவசாயிகள் குறைந்த பட்சம் 2 ஏக்கா் பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி செய்ய வேண்டும். இப்போட்டியில் பங்கேற்றிட பதிவு கட்டணம் ரூ.150 ஆகும் இப் போட்டியில் பங்கேற்கும் விவசாயிகள் அறுவடையை வரும் 2025 மாா்ச் 15ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

மேலும், விராலிமலை வட்டாரத்தில் நிகழாண்டில் மாவட்ட அளவில் நெல், நிலக்கடலை பயிா்கள் என பயிா் விளைச்சல் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் பங்கேற்க பதிவு கட்டணம் ரூ.100 ஆகும். ஆா்வமுள்ள விவசாயிகள் இப்போட்டியில் பங்கு பெறலாம். போட்டியில் முதல் பரிசு ரூ.15 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.10 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ் விவசாயிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும்.