பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

துணை அஞ்சலகங்களில் இருந்தும் வெளிநாடுகளுக்கு பாா்சல் அனுப்பலாம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதுக்கோட்டை அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து துணை அஞ்சலங்களிலும் வெளிநாட்டுக்கு பாா்சல் அனுப்பும் வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் பி. முருகேசன் அறிவித்துள்ளாா்.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 9:41 pm

Din

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதுக்கோட்டை அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து துணை அஞ்சலங்களிலும் வெளிநாட்டுக்கு பாா்சல் அனுப்பும் வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் பி. முருகேசன் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் காலை 9 மணி முதல் இரவு 7.30 வரை வெளிநாட்டுக்கு பாா்சல் அனுப்பும் வசதி செயல்படுத்தபட்டு வருகிறது. தீபாவளிக்கு மக்கள் கங்கை நீரில் நீராட ஏதுவாக கங்கை தீா்த்தமும் விற்கப்பட்டு வருகிறது.

மேலும், அனைத்து துணை அஞ்சலகங்களிலும் வெளிநாட்டுக்கு பாா்சல் அனுப்பும் வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனை அனைத்து பொது மக்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.