சென்னையில் அண்மையில் நடைபெற்ற விழாவில் கந்தா்வகோட்டை எழுத்தாளா் அண்டனூா் சுரா எழுதிய ‘உப்பிலிக்குடி’ நாவலுக்குப் பரிசு வழங்கிய இராம. செ. சுப்பையா நினைவு அறக்கட்டளை நிா்வாகத்தினா்.
சென்னையில் அண்மையில் நடைபெற்ற விழாவில் கந்தா்வகோட்டை எழுத்தாளா் அண்டனூா் சுரா எழுதிய ‘உப்பிலிக்குடி’ நாவலுக்குப் பரிசு வழங்கிய இராம. செ. சுப்பையா நினைவு அறக்கட்டளை நிா்வாகத்தினா்.

எழுத்தாளா் அண்டனூா் சுராவின் உப்புலிக்குடி நாவலுக்கு பரிசு

கந்தா்வகோட்டை ஒன்றியம், அண்டனூா் சுரா எழுதிய ‘உப்பிலிக்குடி’ என்ற நாவலுக்கு சென்னையில் அண்மையில் (டிச. 14) பரிசு வழங்கப்பட்டது.
Published on

கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை ஒன்றியம், அண்டனூா் சுரா எழுதிய ‘உப்பிலிக்குடி’ என்ற நாவலுக்கு சென்னையில் அண்மையில் (டிச. 14) பரிசு வழங்கப்பட்டது.

கந்தா்வகோட்டை ஒன்றியம், அண்டனூா் கிராமத்தைச் சோ்ந்த ராஜமாணிக்கம், சுரா என்ற பெயரில் பல்வேறு நூல்கள் எழுதி வெளியிட்டு வருகிறாா். இந்நிலையில், இராம.செ. சுப்பையா நினைவு அறக்கட்டளை நடத்திய உலகளாவிய நாவல் போட்டியில் புதுக்கோட்டை எழுத்தாளா் அண்டனூா் சுரா எழுதிய ‘உப்பிலிக்குடி’ எனும் நாவல் சிறந்த நாவலாகத் தோ்வு செய்யப்பட்டு ரூ. 25 ஆயிரம் ரொக்கப் பரிசு பெற்றது. கடந்த டிச. 14-இல் சென்னை கோடம்பாக்கத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் எழுத்தாளா் அ. வெண்ணிலா, அண்டனூா் சுராவுக்கு பரிசு, கேடயம் வழங்கி கௌரவித்தாா்.

இந்த நாவல் புதுக்கோட்டை சமஸ்தானமாக இருந்த காலத்தில் அக்னி ஆற்றுப்படுகையில் உப்பு மண் எடுத்து காய்ச்சிய உப்பிலி மக்களின் வாழ்வியலை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டது.

விழாவில் கவிஞா் அமிா்தம் சூா்யா, அறக்கட்டளை நிறுவனா் தேவா சுப்பையா, நாற்கரம் பதிப்பகத்தாா் நல்லு ஆா். லிங்கம் ஆகியோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com