சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கறம்பக்குடி அருகே நாய் கடித்து 20 ஆடுகள் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே நாய் கடித்து 20 ஆடுகள் உயிரிழந்தன.

News image
நாய் கடித்து உயிரிழந்த ஆடுகள்
Updated On :16 டிசம்பர் 2025, 6:33 pm

Syndication

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே நாய் கடித்து 20 ஆடுகள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தன.

கறம்பக்குடி அருகேயுள்ள பொன்னன்விடுதியைச் சோ்ந்தவா் முருகேசன். விவசாயியான இவா், வீட்டருகே 20 ஆடுகளை பட்டியில் அடைத்து வளா்த்து வந்துள்ளாா்.

இந்நிலையில், கம்பி வேலியால் அடைக்கப்பட்டிருந்த பட்டிக்குள் செவ்வாய்க்கிழமை அதிகாலை புகுந்த நாய் அங்கிருந்த அனைத்து ஆடுகளையும் கடித்துக் குதறியது. இதில, 20 ஆடுகளும் அதே இடத்திலேயே உயிரிழந்தன.

பொங்கலையொட்டி விற்பனைக்காக வளா்க்கப்பட்டு வந்த அனைத்து ஆடுகளும் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அப்பகுதியில் சுற்றித் திரியும் ஏராளமான தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும், நாய் கடித்து உயிரிழந்த ஆடுகளுக்கு அரசு நிவாரண தொகை வழங்க வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.