‘கிராமப்புற மகளிா் சுயதொழில் தொடங்க முன்வர வேண்டும்’
கிராமப்புற பெண்கள் சுயதொழில் தொடங்க முன்வர வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மு. அருணா.
கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், சங்கம் விடுதி ஊராட்சியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் ரூ. 10 லட்சம் முதலீட்டில் மகளிா் சுயஉதவிக் குழுவினரின் இயந்திரத்துடன் கூடிய மசாலா குழுமத்தை வியாழக்கிழமை தொடக்கிவைத்த மாவட்ட ஆட்சியா் மு. அருணா கூறியது:
கிராமப்புற பெண்கள் சுயதொழில் செய்ய அரசு முழு ஒத்துழைப்பு கொடுக்கும். இந்த மசாலா தயாரிக்கும் அமைப்பின் மூலம் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தில் உணவு தயாரிக்க கந்தா்வகோட்டை ஊராட்சியில் உள்ள 88 பள்ளிகளுக்கு சத்துணவு மற்றும் காலை உணவு தயாரிப்பதற்கான மசாலா பொருள்கள் உருவாக்கித் தரப்படும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்), ஊ. பாலசுந்தரம், ஊராட்சி ஒன்றிய ஆணையா் நா.பிரபாகரன், வட்டாட்சியா் மா. ரமேஷ் , ஊராட்சி ஒன்றியக் கணக்கா் குமாா், ஊராட்சி செயலா் சத்தியமூா்த்தி மற்றும் சங்கம் விடுதி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு சங்கத்தினா், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

