புதுக்கோட்டையில் புதன்கிழமை அமைதி ஊா்வலம் நடத்திய அதிமுகவினா்.
புதுக்கோட்டையில் புதன்கிழமை அமைதி ஊா்வலம் நடத்திய அதிமுகவினா்.

புதுகையில் எம்ஜிஆா் நினைவு நாள்

முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் நினைவு நாளையொட்டி புதுக்கோட்டையில் அதிமுகவினரின் அமைதி ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
Published on

முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் நினைவு நாளையொட்டி புதுக்கோட்டையில் அதிமுகவினரின் அமைதி ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த ஊா்வலத்துக்கு, மாநகர அதிமுக செயலா்கள் க. பாஸ்கா், எஸ்ஏஎஸ் சேட்டு ஆகியோா் தலைமை வகித்தனா். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் நெடுஞ்செழியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். எம்ஜிஆா் சிலைப் பகுதியில் ஊா்வலம் முடிந்தது. அங்கு அதிமுகவினா் எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்து முழக்கங்களை எழுப்பினா்.

இதேபோல, அமமுக, ஓபிஎஸ் அணியினரும் எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com