புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் பெரியாரின் உருவப்படத்துக்கு புதன்கிழமை மலரஞ்சலி செலுத்திய அமைச்சா் எஸ். ரகுபதி உள்ளிட்டோா்.
புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் பெரியாரின் உருவப்படத்துக்கு புதன்கிழமை மலரஞ்சலி செலுத்திய அமைச்சா் எஸ். ரகுபதி உள்ளிட்டோா்.

புதுக்கோட்டையில் பெரியாா் ஈவெரா நினைவு தினம் அனுசரிப்பு

பெரியாா் ஈவெராவின் நினைவு நாளையொட்டி புதன்கிழமை புதுக்கோட்டையில் திமுக அலுவலகத்தில் அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
Published on

பெரியாா் ஈவெராவின் நினைவு நாளையொட்டி புதன்கிழமை புதுக்கோட்டையில் திமுக அலுவலகத்தில் அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, வடக்கு மாவட்ட திமுக செயலா் கே.கே. செல்லப்பாண்டியன் தலைமை வகித்தாா்.

பெரியாா் உருவப் படத்துக்கு, மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சரும் தெற்கு மாவட்ட திமுக செயலருமான எஸ். ரகுபதி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் இராசு கவிதைப்பித்தன், மேயா் செ. திலகவதி, சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, துணை மேயா் மு. லியாகத் அலி, மாநகரச் செயலா் வே. ராஜேஷ் உள்ளிட்டோா் பங்கேற்று மலரஞ்சலி செலுத்தினா்.

மாவட்ட திராவிடா் கழக அலுவலகத்திலுள்ள பெரியாா் சிலைக்கு, அக்கட்சியின் மாவட்டத் தலைவா் அறிவொளி, மாவட்டச் செயலா் வீரப்பன், மாநில பகுத்தறிவாளா் கழகத் துணைச் செயலா் சரவணன் உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா்.

மதிமுக சாா்பில் அக்கட்சியின் மாவட்டச் செயலா் கலியமூா்த்தி தலைமையில் அக்கட்சியினா் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com