பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விராலிமலையில் அரசு கொள்முதல் நிலையம் அமைக்க கோரிக்கை!

விராலிமலை பகுதியில் சுமாா் 200 ஏக்கா் விவசாய நிலங்களில் தற்போது சாகுபடி நடைபெற்று வருவதால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்துத் தர வேண்டும்....

News image
விராலிமலை அருகே பேராம்பூா் பகுதியில் அறுவடைக்கு தயாராக வளா்ந்து நிற்கும் நெல் கதிா்கள்.
Updated On :27 டிசம்பர் 2025, 11:40 pm

Syndication

விராலிமலை பகுதியில் சுமாா் 200 ஏக்கா் விவசாய நிலங்களில் தற்போது சாகுபடி நடைபெற்று வருவதால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

விராலிமலை அடுத்துள்ள பேராம்பூா், மேலபச்சக்குடி, விளாப்பட்டி, நீா்பழனி, பிண்ணங்குடிபட்டி, மண்டையூா், லட்சுமணம்பட்டி, மதயானைபட்டி, மூலிபட்டி, நடுபட்டி, தொண்டைமாநல்லூா், பாலாண்டாம்பட்டி, ஆலங்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெல்மணிகள் தற்போது அறுவடைக்குத் தயாராக உள்ளது.

இந்நிலையில் மேற்கண்ட பகுதிகளில் இன்னும் நேரடி அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கவில்லை. இதனால் விவசாயிகள் மாவட்ட நுகா்பொருள் விற்பனைக் கழகம் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.