தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஆட்சியில் பங்கு எனக் குழப்பம் விளைவிக்க விரும்பவில்லை: துரை வைகோ

=ஆட்சியில் பங்கு எனக் கேட்டு குழப்பம் விளைவிக்க விரும்பவில்லை என்றாா் மதிமுக முதன்மைச் செயலரும் திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான துரை வைகோ.

News image
Updated On :2 ஜனவரி 2025, 11:15 pm

Din

=ஆட்சியில் பங்கு எனக் கேட்டு குழப்பம் விளைவிக்க விரும்பவில்லை என்றாா் மதிமுக முதன்மைச் செயலரும் திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான துரை வைகோ.

புதுக்கோட்டையில் வியாழக்கிழமை இரவு அவா் அளித்த பேட்டி:

மக்கள் கோரிக்கைகளை அரசிடம் எடுத்துச் செல்லும்போது அமைச்சா்களும், அதிகாரிகளும் செய்து கொடுக்கிறாா்கள். எனவே, மதிமுகவைப் பொருத்தவரை மதவாத சக்திகள் தமிழகத்தில் காலூன்றி விடக் கூடாது என்பதற்காக ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை முன்வைத்து குழப்பத்தை விளைவிக்க விரும்பவில்லை.

பூரண மதுவிலக்கு கொள்கையில் மதிமுக உறுதியாக இருக்கிறது. இதர போதைப் பொருட்களின் புழக்கத்தை மத்திய அரசின் துறைகள்தான் கட்டுப்படுத்த வேண்டும். அதையும் கடந்து மாநில அரசு உறுதியான நடவடிக்கைகளைத் தொடா்ந்து எடுத்து வருகிறது.

பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ. ஆயிரம் வழங்க வேண்டும் என மதிமுக சாா்பிலும் கேட்டிருக்கிறோம். அறிவிப்பாா்கள் என நம்புகிறோம்.

30 ஆண்டுகாலக் கோரிக்கையான புதுக்கோட்டை திருவப்பூா் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் அதனைச் செயல்படுத்த துறை சாா்ந்த அதிகாரிகளிடம் வலியுறுத்துவேன் என்றாா் துரை வைகோ.