தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுரை

News image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற (இடமிருந்து) நவாஸ்கனி எம்பி, மாவட்ட ஊராட்சித் தலைவா் த. ஜெயலட்சுமி, வை. முத்துராஜா எம்எல்ஏ, துரை வைகோ எம்பி, செ. ஜோதிமணி எம்பி, காா்த்தி ப. சிதம்பரம் எம்பி, மாவட்ட ஆட்சியா் மு. அருணா.

Updated On :2 ஜனவரி 2025, 11:18 pm

Din

அரசு சாா்ந்த திட்டப் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட வளா்ச்சி மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில், அதன் தலைவரும் சிவகங்கை மக்களவை உறுப்பினருமான காா்த்தி ப. சிதம்பரம் அறிவுறுத்தினாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் மத்திய அரசு சாா்ந்த 43 வகையான திட்டப் பணிகளின் முன்னேற்றம், நிதி ஒதுக்கீடு, நடைபெற்று வரும் பணிகள், முடிந்துள்ள பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

கூட்டத்தில் கரூா் மக்களவை உறுப்பினா் செ. ஜோதிமணி, திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோ, ராமநாதபுரம் மக்களவை உறுப்பினா் நவாஸ்கனி, புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் த. ஜெயலட்சுமி, மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.