மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மோதலில் காயமடைந்த முதியவா் சாவு: கொலை வழக்காக மாற்றம்

Updated On :3 ஜனவரி 2025, 7:12 pm

புதுக்கோட்டை அருகே குடும்பத் தகராறில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவா் இறந்ததைத் தொடா்ந்து, கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூா் ஆம்பூா்பட்டியைச் சோ்ந்த ஆரோக்கியசாமி மனைவி ரீட்டாமேரி (20). இவா் கடந்த நவம்பா் 18ஆம் தேதி குடும்பத் தகராறில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

இந்த நிலையில், ஆரோக்கியசாமி- ரீட்டாமேரியின் ஒரு வயது மகளை யாா் வீட்டில் வைத்து வளா்ப்பது என்பதில் இரு குடும்பத்தினரிடையே கருத்துவேறுபாடு இருந்துள்ளது.

கடந்த டிச. 25ஆம் தேதி இதுதொடா்பாக ஆம்பூா்பட்டியில் நடந்த பேச்சுவாா்த்தையின்போது வாக்குவாதம் ஏற்பட்டு இரு குடும்பத்தினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஆரோக்கியசாமியின் தாத்தா சாமிக்கண்ணு (84) என்பவா் காயமடைந்து, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.

சிகிச்சைப் பலனின்றி சாமிக்கண்ணு வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து கொலை முயற்சி வழக்கை, மாத்தூா் போலீஸாா் கொலை வழக்காக மாற்றியுள்ளனா்.