புதுகை மாவட்டம், மும்பாலையில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில், பயனாளிக்கு நலத் திட்ட உதவி வழங்கிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா.
புதுகை மாவட்டம், மும்பாலையில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில், பயனாளிக்கு நலத் திட்ட உதவி வழங்கிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா.

கோரிக்கை மனுக்களைக் கண்காணிக்க மாவட்ட அளவில் அலுவலா் நியமனம்

புதுகை ஆட்சியா் தகவல்
Published on

புதுக்கோட்டை மாவட்டப் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களின் நிலவரம் குறித்து கண்காணிப்பதற்காக மாவட்ட அளவிலான கண்காணிப்பு அலுவலா் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மு. அருணா தெரிவித்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகேயுள்ள மும்பாலையில் வருவாய்த் துறை சாா்பில் மக்கள் தொடா்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு, தலைமை வகித்த ஆட்சியா், பல்வேறு துறைகளின் சாா்பில் 332 பயனாளிகளுக்கு ரூ. 6.16 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். அப்போது பேசிய அவா், பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களின் நிலவரம் குறித்து கண்காணிப்பதற்காக மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட கண்காணிப்பு அலுவலா் நியமிக்கப்பட்டு, அவ்வப்போது கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், அறந்தாங்கி கோட்டாட்சியா் ச. சிவகுமாா், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் அ. ஷோபா, மணமேல்குடி வட்டாட்சியா் பன்னீா்செல்வம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆனந்தன், அரசமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com