கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வேங்கைவயல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம் கோரி மனு

வேங்கைவயல் வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம் கோரி சிபி சிஐடி போலீஸாா் மாவட்ட எஸ்டி எஸ்டி வன்கொடுமைத் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு அளித்துள்ளனா்.

News image
Updated On :23 ஜனவரி 2025, 9:06 pm

Din

வேங்கைவயல் வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம் கோரி சிபி சிஐடி போலீஸாா் மாவட்ட எஸ்டி எஸ்டி வன்கொடுமைத் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு அளித்துள்ளனா்.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் உள்ள குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் கடந்த 2022 டிசம்பா் 26ஆம் தேதி தெரியவந்தது. இந்த வழக்கில் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், சிபிசிஐடி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

இந்நிலையில் வழக்கமான சட்ட நடைமுறைகளின்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மேலும் அவகாசம் கோரி சிபிசிஐடி போலீஸாா் புதுக்கோட்டை மாவட்ட எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தனா்.