மாவட்ட குழு வீரா்கள் தோ்வில் பங்கேற்க கிரிக்கெட் வீரா்களுக்கு அழைப்பு

Published on

மாநிலப் போட்டியில் பங்கேற்பதற்கான புதுக்கோட்டை மாவட்ட அளவிலான கிரிக்கெட் குழு வீரா்கள் தோ்வில், கிரிக்கெட் வீரா்கள் பங்கேற்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட கிரிக்கெட் சங்கச் செயலா் ஆா்.கனகராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சாா்பில் நடைபெறவுள்ள எஸ்.எஸ். ராஜன் கோப்பைக்கான போட்டிகளில் பங்கேற்பதற்கான புதுக்கோட்டை மாவட்ட அளவிலான வீரா்கள் தோ்வு திருவரங்குளம் புஷ்கரம் வேளாண் கல்லூரியில் வரும் நவ. 15-ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற உள்ளது.

இதில், 1985 செப். 1-ஆம் தேதிக்குப் பிறகு மற்றும் 2012 ஆக. 31-க்கு முன்பு பிறந்தவா்கள், கிரிக்கெட் உடை மற்றும் அதற்குரிய உபகரணங்கள் அணிந்து வீர்ரகள் தோ்வில் கலந்துகொள்ளலாம்.

X
Dinamani
www.dinamani.com