புதுக்கோட்டை
கோயில் குளத்தில் கிராம உதவியாளா் சடலம் மீட்பு
புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் அருகே கோயில் குளத்தில் குளித்த கிராம உதவியாளா், சடலமாக மீட்கப்பட்டாா்.
புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் அருகே கோயில் குளத்தில் குளித்த கிராம உதவியாளா், சடலமாக வியாழக்கிழமை மீட்கப்பட்டாா்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையாா்கோவில் வட்டம் ஏம்பல் அருகே ஒக்கூரைச் சோ்ந்தவா் சி. ராமநாதன் (50). கிராம உதவியாளரான இவா், வியாழக்கிழமை இங்குள்ள கோயில் குளத்தில் குளித்த நிலையில், தண்ணீரில் சடலமாக மிதந்தாா்.
தகவலறிந்து வந்த ஏம்பல் போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.
ராமநாதனின் தலையில் காயம் உள்ளதால், குளக் கரையின் படிக்கட்டில் வழுக்கி விழுந்து, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என போலீஸாா் சந்தேகிக்கின்றனா்.
