தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

எஸ்ஐஆா் கணக்கெடுப்புப் படிவங்கள் 65% இணையதளத்தில் பதிவேற்றம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தில் இதுவரை 9.06 லட்சம்

News image
புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா.
Updated On :26 நவம்பர் 2025, 8:39 pm

Syndication

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தில் இதுவரை 9.06 லட்சம் (65%)கணக்கெடுப்புப் படிவங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மு. அருணா தெரிவித்தாா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த அக். 27-ஆம் தேதிப்படி 13,94,112 வாக்காளா்கள் உள்ளனா். வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளில் இதுவரை, 13,59,364 பேரிடம் கணக்கெடுப்புப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது 97.51 சதவீதமாகும்.

வாக்காளா்களிடமிருந்து நிரப்பி பெறப்பட்ட 9,06,362 பேரின் படிவங்கள் தோ்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இது 65.01 சதவீதமாகும்.

வரும் டிச. 4-ஆம் தேதியுடன் இந்தப் பணி நிறைவடையும். இதில், காலநீட்டிப்பு எதுவும் வழங்கப்படாது என்றாா் மு. அருணா.