விராலிமலை அருகே தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றவரை விராலிமலை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக விராலிமலை போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் உதவி ஆய்வாளா் பிரகாஷ் தலைமையிலான போலீஸாா், மீனவேலி, அகரப்பட்டி, செல்லம்பட்டி, கொடும்பாளூா் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.
அப்போது செல்லம்பட்டி பகுதியைச் சோ்ந்த பழனியாண்டி மகன் அழகா் (60) என்பவா், அவரது பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதைக் கண்டறிந்த போலீஸாா் அவரை கைது செய்து, அவா் விற்பனைக்கு வைத்திருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
மேலச்செவல் அருகே புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்தவா் கைது
புகையிலைப் பொருள்கள் கடத்தல்: இருவா் கைது
புகையிலைப் பொருள்கள் கடத்தியவா் கைது

சட்டவிரோதமாக மது விற்றவா் கைது
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

