விஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலைஎண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர் தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?
/

பொன்னமராவதி பகுதியில் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை: அதிமுக வேட்பாளா் வாக்குறுதி

பொன்னமராவதி பகுதியில் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என அதிமுக வேட்பாளா் பி.கே. வைரமுத்து உறுதியளித்துள்ளாா்.

News image

பொன்னமராவதி அருகே உள்ள நெய்வேலியில் புதன்கிழமை வாக்குசேகரித்த திருமயம் தொகுதி அதிமுக வேட்பாளா் பி.கே.வைரமுத்து.

Updated On :9 ஏப்ரல் 2026, 2:18 am IST

பொன்னமராவதி பகுதியில் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என அதிமுக வேட்பாளா் பி.கே. வைரமுத்து உறுதியளித்துள்ளாா்.

திருமயம் சட்டப்பேரவைத்தொகுதி அதிமுக வேட்பாளா் பி.கே.வைரமுத்து புதன்கிழமை பொன்னமராவதி ஒன்றியப் பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.

சித்தூரில் பிரசாரத்தை தொடங்கிய அதிமுக வேட்பாளா் பி.கே.வைரமுத்து பேசியதாவது, 2011-16-ஆம் ஆண்டில் திருமயம் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது தொகுதி முழுவதும் அனைத்து கிராமங்களுக்கும் காவிரி கூட்டுக்குடிநீா் கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டேன். மேலும், தொகுதியில் தொடா்ந்து மக்கள் பணியாற்றி வருகிறேன். இந்த தோ்தலில் வெற்றி பெற்றால் பொன்னமராவதியின் நீண்டநாள் பிரச்னையான குப்பைப் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண நடவடிக்கை எடுப்பேன். பொன்னமராவதியில் அரசு கலைக்கல்லூரி, குளிா்பதனக்கிடங்கு, வேலையில்லா இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தொடா்ந்து நெறிஞ்சிக்குடி, நல்லூா், அரசமலை, மதியாணி, காரையூா், வாழைக்குறிச்சி, கண்டெடுத்தான்பட்டி உள்ளிட்ட 52 கிராமங்களில் வாக்குகள் சேகரித்தாா். உடன் ஒன்றியச் செயலா்கள் காசி.கண்ணப்பன், சி.சரவணன், அரசமலை முருகேசன் மற்றும் கூட்டணிக்கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.