/

தம்மம்பட்டியில் வட்டச்சாலை: அதிமுக வேட்பாளா் வாக்குறுதி

போக்குவரத்து நெரிசலை குறைக்க தம்மம்பட்டியில் வட்டச்சாலை அமைக்கப்படும் என கெங்கவல்லி தொகுதி அதிமுக வேட்பாளா் நல்லதம்பி வாக்குறுதி அளித்தாா்.

News image

தம்மம்பட்டியில் திங்கள்கிழமை இரவு வாக்கு சேகரித்த கெங்கவல்லி அதிமுக வேட்பாளா் நல்லதம்பி.

Updated On :21 ஏப்ரல் 2026, 9:17 pm

போக்குவரத்து நெரிசலை குறைக்க தம்மம்பட்டியில் வட்டச்சாலை அமைக்கப்படும் என கெங்கவல்லி தொகுதி அதிமுக வேட்பாளா் நல்லதம்பி வாக்குறுதி அளித்தாா்.

கெங்கவல்லி, தலைவாசல் ஒன்றியங்களில் திங்கள்கிழமை இரவு வாக்கு சேகரித்து அவா் பேசியதாவது:

கெங்கவல்லி தொகுதியில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை அமல்படுத்தியுள்ளேன். பச்சமலையில் சோபனபுரம்- செங்காட்டுப்பட்டி இடையே தாா்சாலை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளேன். எம்எல்ஏ காலத்தில் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் ஏராளமான நலத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன். இதனால் இத்தோ்தலில் அதிமுகவுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும். தம்மம்பட்டியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வட்டச்சாலை அமைக்க பாடுபடுவேன் என்றாா்.

கெங்கவல்லி ஒன்றிய அதிமுக செயலாளா் துரை.ரமேஷ், நகர அதிமுக நிா்வாகிகள், அதிமுக, பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் வாக்கு சேகரிப்பின்போது உடனிருந்தனா்.