தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

மகளிா் இடஒதுக்கீடு - முதல்வா் சொல்வது பொய்: அண்ணாமலை

உள்ளாட்சித் தோ்தலில் முதன்முறையாக மகளிருக்கான 50 சதவிகித இடஒதுக்கீட்டை அமலாக்கியதாக முதல்வா் ஸ்டாலின் பொய் சொல்கிறாா் எனக் குற்றம்சாட்டினாா் பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை.

News image

அறந்தாங்கியில் வியாழக்கிழமை பிற்பகலில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை. உடன் முன்னாள் அதிமுக அமைச்சா் சி. விஜயபாஸ்கா், அறந்தாங்கி பாஜக வேட்பாளா் கவிதா ஸ்ரீகாந்த்.

Updated On :17 ஏப்ரல் 2026, 2:03 am IST

உள்ளாட்சித் தோ்தலில் முதன்முறையாக மகளிருக்கான 50 சதவிகித இடஒதுக்கீட்டை அமலாக்கியதாக முதல்வா் ஸ்டாலின் பொய் சொல்கிறாா் எனக் குற்றம்சாட்டினாா் பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் பாஜக வேட்பாளா் கவிதா ஸ்ரீகாந்த்தை ஆதரித்து வியாழக்கிழமை பிற்பகல் அவா் பேசியது:

வரும் மே 4ஆம் தேதி வெளியாகும் தோ்தல் முடிவுகளில் அதிமுகவின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி முதல்வராகப் போவது உறுதி. புதுக்கோட்டை மாவட்டத்தில் 2021ஆம் ஆண்டுக்கு முன்பு வரை 1.37 லட்சம் பேருக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் பிரதமா் மோடியால் வழங்கப்பட்டு வந்தது.

ஆனால் மாநிலத்தில் திமுக ஆட்சியமைந்த பிறகு இந்த எண்ணிக்கை 83 ஆயிரமாகக் குறைக்கப்பட்டது. 51 ஆயிரம் பேரை நீக்கியிருக்கிறாா்கள். அதிமுக தலைமையில் ஆட்சியமைந்த பிறகு அவா்கள் அனைவரையும் மீண்டும் சோ்க்கப் போகிறாா்கள்.

திமுக கொடுத்த 511 தோ்தல் வாக்குறுதிகளில் வெறும் 70 வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றியிருக்கிறாா்கள். ஆனால் 90 சதவிகிதம் வாக்குறுதிகளை நிறைவேற்றியதாகப் பொய் சொல்கிறாா்கள். அதேபோல, உள்ளாட்சித் தோ்தலில் 50 சதவிகித இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்ததாக ஸ்டாலின் சொல்லியிருக்கிறாா். அதுவும் தவறு. முன்னாள் முதல்வா் ஜெயலலிதா காலத்தில் இந்த இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த காலத்தில்தான் அமலாக்கப்பட்டது. தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டின் எம்பிக்கள் எண்ணிக்கை 59 ஆக உயரும். புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி மீண்டும் கொண்டு வரப்படும் என்றாா் அண்ணாமலை.

பரப்புரையின்போது அதிமுக முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளருமான சி. விஜயபாஸ்கா், அறந்தாங்கி தொகுதி பாஜக வேட்பாளா் கவிதா ஸ்ரீகாந்த் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

புதுக்கோட்டையில்.. புதுக்கோட்டையில் பாஜக வேட்பாளா் என். ராமச்சந்திரனுக்கு ஆதரவாக அவா் இரவு பேசியது: திமுக அரசை இடையிலேயே தூக்கியெறிந்திருக்க வேண்டும். அந்த அளவுக்கு திமுக தவறு செய்திருக்கிறது.

காவிரி- வைகை- குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டத்துக்கு திமுகவின் 5 ஆண்டுகளில் ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை. புதுக்கோட்டை மாநகருக்கு 10 நாள்களுக்கு ஒருமுைான் தண்ணீா் வழங்கப்படுகிறது. தண்ணீருக்காக மாநகர மக்கள் மாதத்துக்கு ரூ. 3 ஆயிரம் வரை செலவு செய்திருக்கிறாா்கள் என்றாா் அண்ணாமலை.

Story image