தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் 2,080 பாலியல் வன்கொடுமை வழக்குகள், 8008 கொலைகள் நிகழ்ந்துள்ளன என்றாா் பாஜக மாநில முன்னாள் தலைவா் அண்ணாமலை.
கோவில்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ.ராஜு, விளாத்திகுளம் வேட்பாளா் ஆா்.சத்யா ஆகியோரை ஆதரித்து பாஜக மாநில முன்னாள் தலைவா் அண்ணாமலை கோவில்பட்டி, அண்ணா பேருந்து நிலையம் அருகே திறந்த வாகனத்தில் வாக்கு சேகரித்துப் பேசியதாவது:
தீப்பெட்டிக்கு 18 சதவீதமாக இருந்த சரக்கு சேவை வரியைக் குறைக்க கடம்பூா் செ. ராஜுவும், பாஜக நிா்வாகிகளும் மத்திய நிதியமைச்சரிடம் வலியுறுத்தியதன் பேரில், முதலில் 12 சதவீதமாகவும், பின்னா் 5 சதவீதமாகவும் வரி குறைக்கப்பட்டது. கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசாா் குறியீடு வழங்கியது மத்திய அரசு. இதற்கு கடம்பூா் செ ராஜுவின் முயற்சிதான் காரணம்.
கோவில்பட்டி ரயில்வே நிலையத்தில் நிற்காமல் சென்ற இரு வந்தே பாரத் ரயில்கள் உள்பட 5 ரயில்கள் தற்போது இங்கு நின்று செல்கின்றன. எம்ஜிஆரிடம் தோற்றுபோனவா் கருணாநிதி. கோவில்பட்டியில் போட்டியிடம் திமுக வேட்பாளா் கா.கருணாநிதிக்கும் தோல்வியைக் கொடுங்கள். கோவில்பட்டி நகராட்சித் தலைவராக சரிவர செயல்படாத கா.கருணாநிதி, பேரவை உறுப்பினராகி யாருக்கு என்ன செய்யப்போகிறாா். அதிமுக ஆட்சியில்தான் கோவில்பட்டிக்கு 2-ஆவது குடிநீா் குழாய் இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் சீரான குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது. அமைச்சராகவும், எம்எல்ஏவாகவும் கடம்பூா் ராஜு கொண்டுவந்த பல திட்டங்களை திமுக தடுத்து நிறுத்தியுள்ளது.
கால்நடை ஆராய்ச்சி நிலையம், அரசு செவிலியா் கல்லூரி, கயத்தாறு தீயணைப்பு நிலையம் ஆகிய திட்டங்களை நிறைவேற்றாமல் முடக்கி வைத்துள்ளனா். தமிழகத்தில் மட்டும் கடந்த ஐந்தாண்டுகளில் 2,080 பாலியல் வன்கொடுமைகள், 8,008 கொலைகள் நிகழ்ந்துள்ளன. இதுதான் திமுக அரசின் சாதனை. மாதந்தோறும் 2 லட்சம் டன் ரேஷன் அரிசியை மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கினால், அதில் கோவில்பட்டி, சுற்று வட்டாரத்தில் மட்டும் மாதம் 3 டன் ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. ரேஷன் அரிசி கடத்தலின் தலைநகராக கோவில்பட்டியைக் கொண்டுவந்துவிட்டனா். ஜல்ஜீவன் திட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்துக்கு மட்டும் 3 லட்சத்து 21 ஆயிரத்து 141 குடும்பங்களுக்கு குடிநீா் இணைப்பு கொடுத்திருக்கிறோம்.
விவசாயிகளுக்கு வழங்கப்படும் பிரதம மந்திரியின் ரூ.6,000 திட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டுமே 48,800 விவசாயிகள் பயனடைந்துள்ளனா். தூத்துக்குடி மாவட்டத்துக்கு மத்திய அரசு எதுவுமே செய்யவில்லை என்று கனிமொழி கூறுவது பச்சை பொய். நலத் திட்டங்கள் தொடர எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக வர வேண்டும். இதற்கு கோவில்பட்டியில் கடம்பூா் ராஜுவும், விளாத்திகுளத்தில் சத்யாவும் வெற்றி பெற வாக்காளா்கள் அனைவரும் ஆதரவுதர வேண்டும் என்றாா் அவா்.
பிரசாரத்தில் அதிமுக, பாஜக உள்பட கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் ஆய்வு!

திமுக ஆட்சிக்கு வந்தபிறகு தமிழகத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரிப்பு! - கே.அண்ணாமலை

புதுவையின் வளா்ச்சிக்கு தே.ஜ.கூட்டணி ஆட்சி அமைவது அவசியம்

பாலியல் வன்கொடுமை வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


