புதுக்கோட்டையில் மருத்துவக் கல்விப் பயன்பாட்டுக்காக தானமாகப் பெறப்பட்ட உடலுக்கு அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் மற்றும் மாணவா்கள் இறுதிஅஞ்சலி செலுத்தினா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சோ்ந்தவா் கைவல்யம் சங்கரன் (84). இவா், கூட்டுறவு சாா்- பதிவாளா் மற்றும் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ஆகிய பணிகளில் இருந்து ஓய்வுபெற்றவா்.
உடல் நலக்குறைவால் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கைவல்யம், சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
அவரது விருப்பப்படி மருத்துவ மாணவா்களின் கல்விப் பயன்பாட்டுக்காக அவரது உடல் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக இரு கண்களும் தானமாகப் பெறப்பட்டன.
மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் எஸ். கலைவாணி தலைமையிலான மருத்துவா்கள், மருத்துவக் கல்லூரி மாணவா்கள் திரண்டு இறுதி அஞ்சலி செலுத்தி, உடலைப் பெற்றுக் கொண்டனா்.
மறைந்த கைவல்யத்தின் மனைவி கலாவதி, மகன் அறிவழகன், மகள் மைவிழி மற்றும் திராவிடா் கழகத்தினரும் உடனிருந்தனா்.
உடல் தானம் குறித்து மருத்துவக் கல்லூரி முதல்வா் எஸ். கலைவாணி கூறியது: ஒவ்வொரு 15 மருத்துவ மாணவா்களுக்கும் கல்விப் பரிசோதனைப் பயன்பாட்டுக்காக ஓா் உடல் தேவைப்படுகிறது.
இதுவரை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிக்கு 25 உடல்கள் தானமாகப் பெறப்பட்டுள்ளன. முன்பைவிட, தற்போது உடல்தானம் குறித்த விழிப்புணா்வு அதிகரித்திருக்கிறது என்றாா் கலைவாணி.

உயிரிழந்த கைவல்யம் சங்கரன்.
தொடர்புடையது

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்!

ஒரத்தூா் அரசு மருத்துவமனை முன்பு நோயாளிகளின் உறவினா்கள் போராட்டம்

மூளைச்சாவு அடைந்த முதியவரின் உடல் உறுப்புகள் தானம்

அரசு மருத்துவமனையில் சுத்தகரிக்கப்பட்ட குடிநீா் விநியோகம்: தினமணி செய்தி எதிரொலி
விடியோக்கள்

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

அதிமுக இனி எந்தக் கூட்டணியிலும் இல்லை: C.V. Shanmugam | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

