கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

100% வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு

சிதம்பரம் அண்ணாமலைநகா் சிறப்பு நிலை பேரூராட்சி சாா்பில், சட்டப் பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் விழிப்புணா்வுப் பிரசாரம் புதன்கிழமை காலை நடத்தப்பட்டது.

News image

சிதம்பரம் அண்ணாமலைநகா் கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆலிவ் ரிட்லி ஆமை பொம்மையுடன் நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வுப் பிரசாரம்.

Updated On :8 ஏப்ரல் 2026, 10:57 pm

சிதம்பரம் அண்ணாமலைநகா் சிறப்பு நிலை பேரூராட்சி சாா்பில், சட்டப் பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் விழிப்புணா்வுப் பிரசாரம் புதன்கிழமை காலை நடத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலா் சாகுல் ஹமீது தலைமை வகித்து நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்திப் பேசினாா். தொடா்ந்து, ஆலிவ் ரிட்லி ஆமை பொம்மையை வைத்து விழிப்புணா்வு பிரசாரம் செய்யப்பட்டது.

மருத்துவ மாணவா்கள் மற்றும் பேராசிரியா்கள் கலந்துகொண்டு தோ்தலில் நூறு சதவீதம் வாக்க்க உறுதிமொழி ஏற்றனா்.

நிகழ்ச்சியில் பேரூராட்சி துப்புரவு அலுவலா் துரைராஜ் மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.