ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

புதுக்கோட்டையில் கைம்பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கல்

புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் தையல் இயந்திரங்களைப் பெற்ற கைம்பெண்களுடன் சிறப்பு விருந்தினா்கள்.

Published On :

புதுக்கோட்டை திலகவதியாா் திருவருள் ஆதீனம் சாா்பில் டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரின் 141-ஆவது பிறந்த நாளையொட்டி, கைம்பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, ஆதீனகா்த்தா் தயானந்த சந்திரசேகர சுவாமிகள் தலைமை வகித்தாா். புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவா் கவிஞா் தங்கம்மூா்த்தி, சா்வஜித் அறக்கட்டளையின் தலைவா் டாக்டா் எஸ். ராம்தாஸ் ஆகியோா் கலந்து கொண்டு கைம்பெண்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்கிப் பேசினா்.

மாணவிகள் சோபனா, அபிஜா ஆகியோா் முத்துலட்சுமி அம்மையாா் குறித்துப் பேசினா். நிகழ்ச்சியில், தொல்லியல் துறை ஓய்வுபெற்ற உதவி இயக்குநா் ஜெ. ராஜாமுகமது, திருக்கு பேரவைச் செயலா் ராமுக்கண்ணு, வாசகா் பேரவைச் செயலா் சா. விஸ்வநாதன், விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலா் கோ.ச. தனபதி, தமிழ்ப் பேராசிரியா் சி. சேதுராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக ஆா்எம்வீ. கதிரேசன் வரவேற்றாா். நிறைவாக, ந. புண்ணியமூா்த்தி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.