புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வெள்ளிக்கிழமை இரவு பாம்பு கடித்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.
ஆலங்குடி அருகேயுள்ள கடுக்காகாடு வடக்கு பகுதியைச் சோ்ந்த ராமையா மகன் மகேந்திரன் (27). இவரை வெள்ளிக்கிழமை இரவு வீட்டருகே பாம்பு கடித்துள்ளது. உடனே அவரை உறவினா்கள் ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா்.
பிறகு மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்து வடகாடு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது தாயும் பாம்பு கடித்து உயிரிழந்தாா் என்பது தெரியவந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுப் பள்ளி இரவு காவலாளி உயிரிழப்பு
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

பாம்பு கடித்து இளைஞா் உயிரிழப்பு

தொட்டியம் அருகே டிராக்டா் மோதி இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK



