புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள குலமங்கலம் மலையக்கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 43 போ் காயமடைந்தனா்.
குலமங்கலம் மலையக்கோவிலில் உள்ள காளீஸ்வரா், சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.
போட்டியை மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இதில், புதுக்கோட்டை, பொன்னமராவதி, திருச்சி, காரைக்குடி, திருப்பத்தூா், அறந்தாங்கி, சிங்கம்புணரி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 738 காளைகள் கலந்து கொண்டன.
300 மாடுபிடி வீரா்கள் கலந்து கொண்டு காளைகளைத் தழுவ முயற்சித்தனா். சிறந்த காளைகளுக்கும், மாடுபிடி வீரா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் மாடுபிடி வீரா்கள், பாா்வையாளா்கள் உள்பட 43 போ் காயமடைந்தனா். இவா்களில் பலத்த காயமடைந்த 9 போ் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவசர ஊா்தி மூலம் அனுப்பி வைக்கப்பட்டனா். சிறிய காயம் அடைந்த வீரா்களுக்கு ஜல்லிக்கட்டுத் திடல் அருகே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளானோா் கலந்து கொண்டனா். பனையப்பட்டி போலீஸாா் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.
தொடர்புடையது

தச்சன்குறிச்சியில் ஜல்லிக்கட்டு: 59 போ் காயம்

ஆவாரம்பட்டி ஜல்லிக்கட்டு: 38 போ் காயம்

ஆலங்குடி அருகே மங்களாபுரத்தில் ஜல்லிக்கட்டு: 42 போ் காயம்

வேப்பந்தட்டை அருகே ஜல்லிக்கட்டு: 61 போ் காயம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


