கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

கந்தா்வகோட்டையில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு

கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

News image
கந்தா்வகோட்டை பேருந்துநிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்வில் பங்கேற்றோா்.
Updated On :28 பிப்ரவரி 2026, 7:28 pm

Syndication

கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

புதுகை கீதம் - சங்கீதம் குழுவினரால் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் திருமணத் தடைச் சட்டம் 2006-இன்படி பெண்களுக்கு18 வயதும், ஆண்களுக்கு 21 வயதும் திருமண வயது எனவும், குறைந்த வயதில் திருமணம் செய்தால் சட்டத்தின்படி தண்டிக்கப்படுவா்.

இந்தச் சட்டத்தின் படி இருதரப்பு பெற்றோா், மத வழிபாட்டுத் தலைவா்கள் முதல் திருமண தரகா்கள், சமையல்காரா்கள், ஒலி மற்றும் ஒளி அமைப்பாளா்கள், மண்டப மேலாளா்கள், திருமணப் பத்திரிகை அச்சடித்தோா் ஆகியோா் சட்ட நடவடிக்கைக்கு உள்பட்டவா்கள்.

மேலும், பெண் குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்னை என்றால் 1098 என்ற எண்ணிலும், பெண்களுக்கு பிரச்னை என்றால் 181 என்ற எண்ணையும் அழைக்கலாம் எனத் தெரிவித்தனா். ஏற்பாடுகளை திட்ட விரிவாக்க அலுவலா் வளா்மதி, ஊா்நல அலுவலா் மாா்கரெட் மேரி ஆகியோா் செய்திருந்தனா்.