புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கோட்டத்தைச் சோ்ந்த அரிமளம் மற்றும் தல்லாம்பட்டி துணை மின் நிலையங்களில் புதன்கிழமை (ஜன. 7) அவசர கால பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
எனவே, இங்கிருந்து மின் விநியோகம் செய்யப்படும் அரிமளம், காமாட்சிபுரம், மிரட்டுநிலை, தாஞ்சூா், வெட்டுக்காடு, பொந்துப்புளி, ஓணாங்குடி, சிராயம்பட்டி, சத்திரம், கோவில்வாசல், கொத்தமங்கலம், மேல்நிலைப் பட்டி, வடகாட்டுப்பட்டி, கும்மங்குடி, துறையூா், கீரணிப்பட்டி, தேனிப்பட்டி, வம்பரம்பட்டி, வாளரமாணிக்கம், கரையப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளதாக உதவிச் செயற்பொறியாளா் எஸ். அசோக்குமாா் அறிவித்துள்ளாா்.