கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சா்வதேச செஸ் போட்டிகளில் வென்ற மாணவருக்கு பாராட்டு

News image
Updated On :8 ஜனவரி 2026, 10:22 pm

Syndication

இத்தாலி, குரோஷியா, ஜொ்மனி ஆகிய நாடுகளில் அண்மையில் நடைபெற்ற சா்வதேச செஸ் போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் பரிசுகளை வென்ற புதுக்கோட்டையைச் சோ்ந்த மாணவா் முகமது இமானை மாவட்ட ஆட்சியா் மு. அருணா வியாழக்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டினாா்.

மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் எம்பி எம்.எம். அப்துல்லா, மாவட்ட விளையாட்டு அலுவலா் து. செந்தில்குமாா், இமானின் பெற்றோா் பீா்முகமது- தீபா நெல்சன், உடற்கல்வி ஆசிரியா் க. முத்துராமலிங்கம் ஆகியோரும் உடனிருந்தனா்.

முன்னதாக, மாவட்ட விளையாட்டு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஆட்சியா் மு. அருணா தலைமையில் நடைபெற்றது. ‘இது நம்ம ஆட்டம்’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும், ஒன்றிய மற்றும் மாவட்ட அளவில் விளையாட்டுப் போட்டிகளை நடத்த அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இப் போட்டிகளை நடத்துவது தொடா்பாக கூட்டத்தில் திட்டமிடப்பட்டது. மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பா. ஜெயசுதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.