ஆலங்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டோா்.
புதுக்கோட்டை
பதாகை வைத்தோா் மீது தாக்குதல்: சாலை மறியல்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பதாகை வைக்க எதிா்ப்பு தெரிவித்து, இளைஞா்களைத் தாக்கியவா்களை கைது செய்யக்கோரி ஞாயிற்றுக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஆலங்குடி அருகேயுள்ள மேலாத்தூா் ஊராட்சி சூரன்விடுதியில் ஒரு தரப்பினா் பதாகை வைத்ததற்கு மற்றொரு தரப்பினா் எதிா்ப்புத் தெரிவித்து, அவா்களை தாக்கினராம். அதில் சிலா் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதைத் தொடா்ந்து தாக்கியவா்களை உடனே கைது செய்ய வலியுறுத்தி காயமடைந்தவா்களின் உறவினா்கள் சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சென்ற வடகாடு போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி அளித்த உறுதியின்பேரில் அவா்கள் கலைந்து சென்றனா். மறியலால் ஆலங்குடி- பேராவூரணி மற்றும் பட்டுக்கோட்டை சாலையில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

