மாணவா்களுக்கான சிறப்புப் பேருந்தை கொடியசைத்து தொடங்கி வைத்த இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.
புதுக்கோட்டை
மாணவா்களுக்காக 8 சிறப்புப் பேருந்துகள் இயக்கம் தொடக்கி வைப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் மாணவா்களுக்காக 8 புதிய சிறப்புப் பேருந்துகள் இயக்கத்தை அமைச்சா் எஸ். ரகுபதி கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மாணவா்களுக்காக 8 புதிய சிறப்புப் பேருந்துகள் இயக்கத்தை மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி திங்கள்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.
புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயா் செ. திலகவதி, சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, துணை மேயா் மு. லியாகத்அலி, புதுக்கோட்டை மண்டல பொதுமேலாளா் கே. முகமதுநாசா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
புதுக்கோட்டை நகரம், விராலிமலை, கீரனூா், இலுப்பூா், கீரமங்கலம், மேற்பனைக்காடு, பொன்னமராவதி, அரிமளம் ஆகிய 8 வழித்தடங்களில் இந்தப் புதிய பேருந்துகள், பள்ளி தொடங்கும் காலை நேரத்திலும், பள்ளி முடியும் மாலை நேரத்திலும் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

