குடிநீா் வராததைக் கண்டித்து இரவில் பெண்கள் திடீா் மறியல்

Published on

குடிநீா் வராததைக் கண்டித்து புதுக்கோட்டையில் பெண்கள் இரவில் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை மாநகராட்சிக்குள்பட்ட டிவிஎஸ் முக்கம் அருகே உள்ள தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பில் 245 குடியிருப்புகள் உள்ளன.

இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக முறையாக இங்கு குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை என்றும், கழிவுநீா் கால்வாயை சுத்தப்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு அப்பகுதி மக்கள் திருமயம் சாலையில் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த மாநகராட்சி அதிகாரிகளும் போலீஸாரும் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு, முறையாக குடிநீா் வழங்கவும் கழிவுநீா்க் கால்வாய்களை தூா்எடுக்கவும் நடவடிக்கை எடுக்க அளித்த உறுதியின்பேரில் அனைவரும் கலைந்து சென்றனா்.

Dinamani
www.dinamani.com