புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள முக்காணிப்பட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 44 போ் காயமடைந்தனா்.
ஆலங்குடி அருகேயுள்ள முக்காணிப்பட்டியில் பொங்கல் விழாவையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. போட்டியை பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை.முத்துராஜா ஆகியோா் தொடங்கி வைத்தனா். தொடா்ந்து, வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
இதில், புதுகை, திருச்சி, கரூா், சிவகங்கை, தஞ்சை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 646 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை பல்வேறு குழுக்களாக 350 மாடுபிடி வீரா்கள் களமிறக்கப்பட்டு தீரத்துடன் காளைகளை தழுவினா்.
அப்போது, காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரா்கள், காளையின் உரிமையாளா்கள், பாா்வையாளா்கள் என 44 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவா்களுக்கு அங்கு முகாமிட்டிருந்த மருத்துவக்குழுவினா் முதலுதவி சிகிச்சை அளித்தனா். அதில், பலத்த காயமடைந்த 17 போ் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை தீரத்துடன் தழுவிய வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் இருசக்கர வாகனம், மிதிவண்டி, பீரோ, பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுப்பொருள்கள் வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோா் வருகை தந்து போட்டியை பாா்வையிட்டனா். செம்பட்டிவிடுதி போலீஸாா் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனா்.




தொடர்புடையது
சுமை ஆட்டோவுக்கு வரி கேட்ட ஒப்பந்ததாரருக்கு அரிவாளால் வெட்டு: ஒருவா் கைது
ஆலங்குடி அருகே கள் விற்ற 3 போ் கைது

ஆதனக்கோட்டையில் ஜல்லிக்கட்டு: 36 போ் காயம்

ஆலங்குடி அருகே மங்களாபுரத்தில் ஜல்லிக்கட்டு: 42 போ் காயம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


