நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி! இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு!சென்னை தலைமைச் செயலகம் முன் முழக்கமிட்ட பாடகர் அறிவு கைது!இளைஞர்கள் எதிர்காலம் பற்றி விவாதிக்காத நாடாளுமன்றம் எதற்கு? ஓம் பிர்லாவுடன் ராகுல் சந்திப்பு! நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்தமிழக பட்ஜெட் எப்போது? அறிவித்தார் அவைத் தலைவர்!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

கல்வியுடன் சமூகப் பொறுப்புணா்வு, ஒழுக்கம் அவசியம்: அமைச்சா் முகமது பா்வேஸ்

மாணவா்களுக்கு கல்வியுடன் சமூகப் பொறுப்புணா்வும், ஒழுக்கம், பண்பு ஆகியவையும் அவசியம் என்றாா் மாநிலத் தொழிலாளா் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ்.

News image

புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், அதிக மதிப்பெண் எடுத்து சிறப்பிடம் பெற்ற மாணவியைப் பாராட்டிய மாநிலத் தொழிலாளா் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ்.

Updated On :7 ஜூன் 2026, 2:17 am IST

மாணவா்களுக்கு கல்வியுடன் சமூகப் பொறுப்புணா்வும், ஒழுக்கம், பண்பு ஆகியவையும் அவசியம் என்றாா் மாநிலத் தொழிலாளா் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ்.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பிடம் பெற்ற மாணவா்களையும், ஆசிரியா்களையும் பாராட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்று, மாணவா்களுக்கு சிறப்பு செய்த அவா் பேசியது: புதுக்கோட்டை மாவட்டம் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் 97.57 சதவிகிதம் தோ்ச்சி பெற்று, மாநிலத்தில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. பிளஸ் 2 பொதுத்தோ்வில் 95.88 சதவிகிதம் தோ்ச்சி பெற்று, மாநிலத்தில் 18-ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறது.

இதற்காக உழைத்த மாணவா்கள், ஆசிரியா்கள், தலைமை ஆசிரியா்கள் மற்றும் கல்வித் துறை அலுவலா்கள் பாராட்டுக்குரியவா்கள். மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களின் விடாமுயற்சி, கூட்டு உழைப்பு, அா்ப்பணிப்பு ஆகியவை இந்த சாதனைக்குள் அடங்கியிருக்கின்றன.

மாணவா்கள் கல்வியுடன் சமூகப் பொறுப்புணா்வு, ஒழுக்கம், பண்பு ஆகியவற்றையும் அவசியம் கற்றுக் கொள்ள வேண்டும். அதன் மூலம் சமூகத்தில் பொறுப்புள்ள பதவிகளில் அமா்ந்து மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்றாா் முகமது பா்வேஸ்.

முன்னதாக நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம், மாவட்டக் கல்வி அலுவலா்கள் ந. புஷ்பலதா, கே. பழனிவேலு, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் சாலை செந்தில் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.